பியகமவில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞர் ஒருவர் படுகொலை!

#SriLanka #Police #Investigation #Crime
Thamilini
19 hours ago
பியகமவில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞர் ஒருவர் படுகொலை!

பியகமவில் வாடகை அறையில் தங்கியிருந்த ஒருவர் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

பியகம பொலிஸ் பிரிவின் கெமுனு மாவத்தை பகுதியில் நேற்று (09) இரவு இந்த சம்பவம் நடந்ததாகவும், தாக்குதலில் பலத்த காயமடைந்த நபர் முல்லேரியாவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது. 

ஹோமாகம பிரதேசத்தை சேர்ந்த 30 வயதுடைய நபரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். 

முகமூடி அணிந்த இரண்டு நபர்கள் அவரை கூரிய ஆயுதத்தால் தாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்த. 

சம்பவம் குறித்து விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் LANKA4 ஊடகத்துடன் இணைந்திருங்கள்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!