குவைத்தில் போதைப்பொருள் வழக்கில் இரண்டு இந்தியர்களுக்கு மரண தண்டனை விதிப்பு
#Arrest
#drugs
#Indian
#Kuwait
Prasu
1 day ago
குவைத் நீதிமன்றம் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் இரண்டு இந்தியர்களுக்கு மரண தண்டனை விதித்துள்ளது.
போதைப்பொருள் கட்டுப்பாட்டு அதிகாரிகள் கைஃபான் மற்றும் ஷுவாய்க் பகுதிகளில் கண்காணிப்பு நடத்தி இரண்டு இந்தியர்களை கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து 14 கிலோ ஹெராயின் மற்றும் 8 கிலோ மெத்தம்பேட்டமைன் பறிமுதல் செய்யப்பட்டன. விசாரணையில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் சர்வதேச போதைப்பொருள் வலையமைப்புடன் தொடர்புடையவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
இதற்கான ஆதாரங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் அவர்களுக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
(வீடியோ இங்கே )