சுவிட்சர்லாந்தில் நிலவும் உறைபனி காலநிலை - எச்சரிக்கை
சுவிட்சர்லாந்து முழுவதும் கடும் குளிர் அலை நிலவி வரும் நிலையில், பல பகுதிகளில் இரவு நேர வெப்பநிலை மோசமடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக லா பிரெவீன் பகுதியில் மைனஸ் 30 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகியுள்ளது. நாட்டின் கிழக்குப் பகுதிகளில் உள்ள ஆல்ப்ஸ் மலைச்சிகரங்களிலும் இதைவிட கடுமையான குளிர் நிலவியதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுவரை நிலவி வந்த அடர்ந்த பனிமூட்டம் குளிரின் தீவிரத்தை ஓரளவு மறைத்திருந்தாலும், வானம் தெளிவடைவதால் வரும் நாட்களில் மேலும் கடும் உறைபனி ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், ஜெனிவாவில் நகரில் நேற்று இரவு மைனஸ் 9 டிகிரி வெப்பநிலை பதிவான நிலையில், சூரிச் நகரில் மைனஸ் 8 டிகிரி பதிவாகியுள்ளது.
வரும் நாட்களில் பனிப்பொழிவு மற்றும் பலத்த காற்று வீசும் என முன்னறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. வானிலை நிலவரம் வேகமாக மாறக்கூடிய சூழல் நிலவுவதால், பொதுமக்கள் மற்றும் பயணிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
(வீடியோ இங்கே )