அவசரக்கால சட்டம் நீட்டிக்கப்படுவதன் அவசியம் என்ன?
#SriLanka
#StateOfEmergency
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
22 hours ago
அவசரகால சட்டத்தை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உடனடியாக மீளப்பெற வேண்டும் ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்தியுள்ளது.
நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில் உரையாற்றிய ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார மேற்படி வலியுறுத்தியுள்ளார்த.
பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சேவைகளை வழங்குவதற்கு எவரும் எதிர்ப்பை வெளியிடப்போவதில்லை. அதற்கு நாம் முழுமையான ஆதரவை வழங்குவோம் எனக் கூறிய அவர், அவசரகால சட்டம் நீடிக்கப்படுவதன் அவசியம் தொடர்பிலும் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஊடகங்களை ஒடுக்குவதற்காகவும், அரசாங்கத்துக்கு எதிரான நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்காகவா மேற்படி அவசரக்காலச் சட்டம் நீட்டிக்கப்படுகிறது எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
“இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் LANKA4 ஊடகத்துடன் இணைந்திருங்கள்”