பிரித்தானியாவில் துரித உணவு விளம்பரங்களுக்கு கடுமையான கட்டுப்பாடு விதிப்பு
#Health
#advertisements
#government
#Food
#England
Prasu
1 day ago
பிரித்தானியாவில் சிறுவர்களிடையே அதிகரித்து வரும் உடல் பருமன் சிக்கலைத் தடுக்க துரித உணவு விளம்பரங்களுக்கு இன்று முதல் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
புதிய விதிகளின்படி, கொழுப்பு, சர்க்கரை மற்றும் உப்பு அதிகம் உள்ள உணவுகளின் விளம்பரங்களை இனி இரவு 9 மணி வரை தொலைக்காட்சிகளில் ஒளிபரப்ப முடியாது.
இணையதளங்களில் இத்தகைய விளம்பரங்களுக்கு முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது. சாண்ட்விச், காலை உணவு தானியங்கள் உள்ளிட்ட 13 வகை உணவுப் பொருட்கள் இந்தத் தடைப்பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.
எனினும், நிறுவனங்கள் தங்கள் பிராண்டுகளை விளம்பரப்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ள போதிலும், குறிப்பிட்ட ஆரோக்கியமற்ற உணவுகளைக் காட்சிப்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
(வீடியோ இங்கே )