முதல் முறையாக இளையராஜா இசையில் ராப் கலைஞர்கள் அறிவு மற்றும் வேடன்
#Actor
#TamilCinema
#Movie
#Music
#Ilayyaraja
Prasu
1 hour ago
நம் உணவான அரிசியின் பின்னால் இருக்கும் அரசியலை, விவாசாயத்தின் உண்மைகளை பேசும் அழுத்தமான படைப்பாக மோனிகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், இயக்குநர் எஸ்.ஏ.விஜயகுமார் இயக்கத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் தமிழ்நாடு மாநிலச்செயலாளர் இரா.முத்தரசன், நடிகர் சமுத்திரக்கனி இணைந்து நடித்த திரைப்படம் ‘அரிசி’.
இப்படத்தின் முழுப் படப்பிடிப்பையும் முடித்த படக்குழு, தற்போது இறுதிக்கட்ட பணிகளைத் துவக்கியுள்ளது. இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்த நிலையில், தற்போது போஸ்ட் புரொடக்சன்ஸ் பணிகள் துவங்கி, பரபரப்பாக நடந்து வருகிறது.
இந்நிலையில், ‘அரிசி’ திரைப்படத்துக்காக இசைஞானி இளையராஜா இசையில் பாடகர்கள் அறிவு மற்றும் வேடன் இணைந்திருப்பதாக படக் குழுவினர் அறிவித்துள்ளனர்.
(வீடியோ இங்கே )