பாதிக்கப்பட்டவர்களுக்கு முறையாக நிவாரணம் வழங்கவில்லை ; மஹிந்த ஜயசிங்க

#SriLanka
Mayoorikka
5 months ago
பாதிக்கப்பட்டவர்களுக்கு முறையாக நிவாரணம் வழங்கவில்லை ; மஹிந்த ஜயசிங்க

பெருந்தோட்ட மக்கள் தமது நாளாந்த சம்பளத்தை அரசாங்கத்துக்கு நன்கொடையாக வழங்கியுள்ளமை வரவேற்கத்தக்கது. 

நிவாரணம் கிடைத்ததா என்று குறிப்பு எடுப்பதற்கு மக்கள் மத்தியில் செல்லும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பிஸ்கெட்டாவது கொண்டு செல்ல வேண்டும் என்று தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்தார்.

 கம்பஹா பகுதியில் செவ்வாய்க்கிழமை (30) நடைபெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, நாட்டில் அண்மையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்கள் மற்றும் ஏற்பட்ட இழப்புக்களை வைத்து எதிர்க்கட்சியினர் அரசியல் செய்கிறார்கள். பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கும் நடவடிக்கைகள் சிறந்த முறையில் முன்னெடுக்கப்படுகிறது.

 பாதிக்கப்பட்டவர்களுக்கு முதற்கட்டமாக வழங்கப்படும் 25 ஆயிரம் ரூபா உதவித்தொகை 98 சதவீதமானோருக்கு வழங்கப்பட்டுள்ளது. 50 இலட்சம் ரூபா வழங்கலுக்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு முறையாக நிவாரணம் வழங்கவில்லை. அரச அதிகாரிகள் மந்தகதியில் செயற்படுவதாக எதிர்க்கட்சியினர் குறிப்பிடுகிறார்கள். அனர்த்தத்தால் அரச உத்தியோகத்தர்களும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

 அவர்களின் குடும்பத்தாரும், உறவினர்களும் உயிரிழந்துள்ளார்கள். ஆகவே நெருக்கடிகளுக்கு மத்தியில் தான் அரச உத்தியோகத்தர்கள் நிவாரணம் வழங்கும் நடவடிக்கைளில் ஈடுபடுகிறார்கள். இயற்கை அனர்த்தங்களால் பெருந்தோட்ட மக்கள் தான் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள்.இருப்பினும் அவர்கள் தமது ஒருநாள் சம்பளத்தை அரசாங்கத்துக்கு நன்கொடையாக வழங்கியுள்ளார்கள். இது வரவேற்கத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4