காதலனுக்கு அழைப்பெடுத்து விட்டு யுவதி ஒருவர் ஆற்றில் குதிப்பு!

#SriLanka
Mayoorikka
1 hour ago
காதலனுக்கு அழைப்பெடுத்து விட்டு யுவதி ஒருவர்  ஆற்றில் குதிப்பு!

புத்தளம், வென்னப்புவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நைனாமடை பாலத்திலிருந்து யுவதி ஒருவர் கிங் ஓயாவிற்குள் குதித்து நீரில் மூழ்கி மாயமாகியுள்ளார்.

 சம்பவம் குறித்து வென்னப்புவ பொலிஸ் நிலையத்திற்கு நேற்று தகவல் கிடைத்துள்ளதுடன், இது தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 

 காணாமல் போன யுவதி போருதோட்டை பிரதேசத்தைச் சேர்ந்த 17 வயதுடையவர் எனத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த யுவதி தான் காதலித்த இளைஞனை தொலைபேசி ஊடாக அந்த இடத்திற்கு வருமாறு அழைத்துள்ளார். 

அந்த இளைஞன் தனது நண்பர் ஒருவருடன் பாலத்திற்கு அருகில் வந்தபோது, யுவதி ஆற்றில் குதித்துள்ளார் என்று பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. யுவதியைக் காப்பாற்றுவதற்காக அந்த இளைஞனும் ஆற்றில் குதித்துள்ளார். 

எனினும், அங்கிருந்தவர்கள் இளைஞனைப் பத்திரமாக மீட்ட போதிலும், யுவதி நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார். வென்னப்புவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!