இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தில் இருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்தல் - 08 பேர் கைது!
இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தில் நர்சிப்பட்டினத்திலிருந்து தமிழ்நாடு மற்றும் இலங்கைக்கு கஞ்சா விநியோகித்த குற்றச்சாட்டில் 08 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களில் ஒரு மென்பொருள் பொறியாளரும் உள்ளடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆந்திரா-ஒடிசா எல்லையிலிருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்தப்படுவது இதுவே முதல் முறை என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
நம்பகமான தகவலின் அடிப்படையில் நர்சிப்பட்டினம் மற்றும் நாதவரம் நிலையங்களைச் சேர்ந்த காவல்துறையினர், ஸ்ருகவரம் கிராமத்திற்கு அருகே கும்பலை தடுத்து நிறுத்தி 74 கிலோ கஞ்சா, ஒரு கார், இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மற்றும் தொலைபேசிகளை பறிமுதல் செய்துள்ளனர்.
இந்தக் குழு ஒடிசாவிலிருந்து போதைப்பொருளை வரவழைத்து பல்வேறு வழிகளில் தமிழ்நாட்டிற்கும் பின்னர் இலங்கைக்கும் கொண்டு சென்றதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
(வீடியோ இங்கே )
அனுசரணை
