அவிசாவளை நோக்கி பயணித்த முச்சக்கர வண்டி விபத்து - சிறுவன் பலி!
#SriLanka
#Accident
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
2 months ago
கொழும்பிலிருந்து அவிசாவளை நோக்கி பயணித்த முச்சக்கர வண்டி கட்டுப்பாட்டை இழந்து சாலையை விட்டு விலகி ஒரு விளக்கு கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் சிறுவன் ஒருவன் படுகாயம் அடைந்த நிலையில், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் கடுவெல, கொத்தலாவல பகுதியைச் சேர்ந்த 14 வயதுடைய சிறுவனாவார்.
சம்பவம் குறித்து வெல்லம்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
(வீடியோ இங்கே )
அனுசரணை
