சிரியாவில் மசூதியில் நடந்த குண்டு வெடிப்பில் 8 பேர் உயிரிழப்பு
#Death
#BombBlast
#Syria
#Mosque
Prasu
1 hour ago
சிரியாவில் மசூதியில் தொழுகையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது ஏற்பட்ட குண்டு வெடிப்பில் 8 பேர் உயிரிழந்த நிலையில், 18 பேர் காயம் அடைந்தனர்.
சிரியாவின் ஹோம்ஸில் உள்ள அலவைட் பகுதியில் இந்த குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. சிரியாவில் இஸ்லாமிஸ்ட் அதிகாரிகள் ஆட்சியை கைப்பற்றிய பிறகு நடந்த 2வது பெரிய குண்டு வெடிப்பு இதுவாகும்.
இமாம் அலி பின் அபி தலிப் மசூதியில் இந்த குண்டு வெடிப்பு நடைபெற்றுள்ளது. தொழுகையை குறிவைத்து மசூதியில் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
(வீடியோ இங்கே )