சிறைச்சாலையில் உள்ள கைதிகளை பார்வையிட சிறப்பு வாய்ப்பு!
#SriLanka
#Prison
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
3 hours ago
கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு, நாடு முழுவதும் உள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் உள்ள கைதிகளுக்கு இன்று (25) பார்வையாளர்களைச் சந்திக்க சிறப்பு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இன்று வரும் பார்வையாளர்கள் ஒரு கைதிக்கு மட்டும் போதுமான உணவு அல்லது இனிப்புகளை கொண்டு வருமாறு சிறைச்சாலை ஊடகப் பேச்சாளரும் சிறைச்சாலை ஆணையருமான ஜெகத் வீரசிங்க அறிவுறுத்தினார்.
கிறிஸ்துமஸ் தினத்தன்று கைதிகளின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர்கள் பார்வையிட அனுமதிக்கப்படுகிறார்கள், மேலும் பரிசுகள் மற்றும் விருந்துகளை பரிமாறிக்கொள்ளவும் வாய்ப்பு வழங்கப்படுகிறது.
(வீடியோ இங்கே )
அனுசரணை
