கொழும்பு மாநகர சபைக்கான NPP அரசின் பட்ஜெட் முன்மொழிவு தோற்கடிப்பு!
#SriLanka
#government
#NPP
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
3 hours ago
ஆளும் தேசிய மக்கள் சக்தியின் (NPP) கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கொழும்பு மாநகர சபையின் (CMC) 2026 ஆம் ஆண்டுக்கான தொடக்க பட்ஜெட் முன்மொழிவு, மூன்று வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது.
பட்ஜெட்டுக்கு ஆதரவாக 57 வாக்குகளும், எதிராக 60 கவுன்சிலர்கள் வாக்களித்துள்ளனர்.
‘சர்வஜன பலய’வின் இரண்டு உறுப்பினர்களின் வாக்குகள் வாக்கெடுப்பின் முடிவில் தீர்க்கமானதாக நிரூபிக்கப்பட்டதால், தேசிய மக்கள் சக்தியின் (NPP) வரவு செலவுத் திட்ட முன்மொழிவு மூன்று வாக்குகளால் பெரும்பான்மையாக தோற்கடிக்கப்பட்டது.
கடந்த உள்ளூராட்சித் தேர்தலில், NPP CMC இல் அதிகாரத்தைப் பெற்றது, மேலும் அதன் மேயர் வேட்பாளர் Vraie Cally Balthazar 61 வாக்குகளைப் பெற்று கொழும்பு மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
(வீடியோ இங்கே )
அனுசரணை
