நவம்பர் மாதத்தில் வீழ்ச்சியடைந்த பணவீக்கம்!
#SriLanka
#inflation
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
3 hours ago
நாட்டின் பணவீக்க விகிதம், 2025 அக்டோபரில் 2.7% ஆக இருந்த நிலையில், நவம்பர் 2025 இல் 2.4% ஆகக் குறைந்துள்ளது.
மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிவரத் துறை இன்று வெளியிட்ட அறிவிப்பில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
உணவுப் பணவீக்கம் அக்டோபரில் 4.1% ஆக பதிவாகியிருந்த நிலையில், நவம்பரில் 3.6% ஆகக் குறைந்துள்ளது.
உணவு அல்லாத குழுவின் ஆண்டு பணவீக்கம் 1.5% சதவீதமாக மாறாமல் உள்ளது.
2025 நவம்பர் மாதத்திற்கான அனைத்து பொருட்களுக்கான NCPI 207.2 ஆக உள்ளது, மேலும் இது அக்டோபர் மாதத்துடன் ஒப்பிடும்போது குறியீட்டு புள்ளிகளில் 0.3 குறைவை பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
(வீடியோ இங்கே )
அனுசரணை
