பதுளையில் பணிப்புறக்கணிப்பில் இறங்கிய மருத்துவர்கள்!
#SriLanka
#Hospital
#doctor
#Badulla
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
3 months ago
பதுளை போதனா மருத்துவமனையின் மருத்துவர் ஒருவர் முச்சக்கர வண்டி ஓட்டுநர் ஒருவரால் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
காயமடைந்த மருத்துவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவத்தை அடுத்து பதுளை மருத்துவமனையின் மருத்துவர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தற்போது கிடைக்கப்பெற்ற தகவல்களின்படி, முச்சக்கர வண்டி ஓட்டுநர் மருத்துவரின் வாகனத்தின் பின்னால் நிறுத்தியதை அடுத்து, மருத்துவர் வாகனத்தை நகர்த்துமாறு ஓட்டுநரிடம் கேட்டுள்ளார்.
இந்நிலையில் ஓட்டுநர் மருத்துவரைத் தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
(வீடியோ இங்கே )
அனுசரணை
