வெள்ளப்பெருக்கு காரணமாக நீரில் மூழ்கிய கிராமம்: வீதியோரங்களில் மக்கள்

#SriLanka #Vavuniya #Flood #Disaster
Mayoorikka
1 hour ago
வெள்ளப்பெருக்கு காரணமாக நீரில் மூழ்கிய கிராமம்: வீதியோரங்களில் மக்கள்

அண்மையில் ஏற்பட்ட டித்வா புயலினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக தங்கள் வீடுகளை விட்டு வீதியோரத்தில் வவுனியா பீடியாபாம் மக்கள் வசித்து வருகின்றனர்.

 சுமார் 17 குடும்பங்களே இவ்வாறு தற்காலிகமாக எதுவித அடிப்படை வசதியும் இன்றி வசித்து வருகின்றனர்.

 1975 ஆம் ஆண்டு படித்த வாலிபர் திட்டத்தின் கீழ் குறித்த கிராமம் உருவாக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அண்மையில் இடம்பெற்ற அனர்த்தத்தால் குறித்த கிராமமே நீரில் மூழ்கியதுடன், மக்களின் உடமைகள் எல்லாம் நீரில் அடித்துச்செல்லப்பட்டன. 

 மேலும் வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதுடன், வயல்கள், தோட்டங்கள் முழுமையாக அழிவடைந்துள்ளதுடன், கால்நடைகளும் இறந்துள்ளன. இந்நிலையில் இவ்வாறான வெள்ள அனர்த்தால் தொடர்ந்தும் தமது உயிரையும் உடமையையும் பாதுகாக்க முடியாதுள்ளதாக தெரிவித்த இம்மக்கள், தங்களிற்கு வேறு ஒரு பாதுகாப்பான இடத்தில் காணியினை தந்துதவுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

 இதேவேளை கடந்த மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் குறித்த கிராம மக்களிற்கு பாதுகாப்பான ஒரு இடத்தில் குடியமர்த்துவதற்கு ஏற்றவகையில் இடத்தினை தெரிவு செய்யுமாறு தீர்மாணம் எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது..

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

அனுசரணை

images/content-image/1754511373.jpg


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!