100 செயற்கைக்கோள் இணைய அலகு சேவையை நன்கொடையாக வழங்கிய ஸ்டார்லிங்க்!
#SriLanka
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
5 hours ago
100 செயற்கைக்கோள் இணைய அலகுகளை இலங்கைக்கு நன்கொடையாக வழங்க அமெரிக்காவை தளமாகக் கொண்ட ஸ்டார்லிங்க் முன்வந்துள்ளது.
நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார மேம்பாட்டு அமைச்சக செயலாளர் டாக்டர் ஹர்ஷன சூரியப்பெரும இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
இதற்கமைய இது தகவல் தொடர்பு மற்றும் இணைப்பை கணிசமாக மேம்படுத்தும், அதிகாரிகள் நிவாரணம் மற்றும் அவசரகால மீட்பு நடவடிக்கைகளை மிகவும் திறமையாக மேற்கொள்ள உதவும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
ஸ்டார்லிங்க் வன்பொருள் அலகுகள் ஏற்கனவே இலங்கைக்கு வந்து சேர்ந்துள்ளதாகவும், பேரிடர் மீட்பு திறன்களை மேலும் வலுப்படுத்த பேரிடர் மேலாண்மை மையத்திடம் அவற்றை ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
(வீடியோ இங்கே )
அனுசரணை
