2.3 கிலோகிராம் ஹெராயினுடன் நபர் ஒருவர் விமான நிலையத்தில் கைது!
#SriLanka
#Arrest
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
5 hours ago
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) 2.3 கிலோகிராம் ஹெராயினுடன் ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கட்டுநாயக்க விமான நிலைய காவல்துறை போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் விமான நிலையத்தில் மேற்கொண்ட சோதனையின் போது இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர் மலேசியாவிலிருந்து இலங்கைக்கு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. கைது செய்யப்பட்ட நபர் ரம்புக்கனையைச் சேர்ந்த 28 வயதுடையவராவார்.
சந்தேக நபர் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்,
மேலும் விசாரணைகளுக்காக தடுத்து வைக்கப்படுவார் என்று பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
(வீடியோ இங்கே )
அனுசரணை
