4 அமைப்புகளை தீவிரவாத இயக்கமாக அறிவித்த கனடா
கனடிய பொதுப் பாதுகாப்பு அமைச்சர் கெரி ஆனந்தசங்கரி, இணைய வழியில் வன்முறையைத் தூண்டும் 764 என்ற அமைப்பினை தீவிரவாத இயக்கமாக அறிவித்துள்ளார்.
இந்த இயக்கத்தை தீவிரவாத இயக்கமாக அறிவித்த உலகின் முதல் நாடு கனடா என்பது குறிப்பிடத்தக்கது. கனடிய மத்திய அரசாங்கம் இந்த விடயத்தை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த அமைப்புடன் மேலும் நான்கு அமைப்புகள் கனடாவின் குற்றவியல் சட்டத்தின் கீழ் தீவிரவாத அமைப்புகளின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.
764, மெனியக் மெர்டர் கல்ட், டெரோகிராம் கலக்டிவ், இஸ்லாமிய ஸ்டேட் மொசாம்பிக் ஆகிய அமைப்புக்கள் இவ்வாறு தீவிரவாத இயக்கப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளன.
அரசின் அறிக்கையில், 764 உள்ளிட்ட தீவிரவாத பட்டியலில் இணைக்கப்பட்ட அமைப்புக்கள் சமூக ஊடகங்கள் மற்றும் ஆன்லைன் கேமிங் தளங்களை பயன்படுத்தி ஆட்சேர்ப்பு நடடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
(வீடியோ இங்கே )