மரணம் நிச்சயம் - மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை! (வீடியோ இணைப்பு)

#SriLanka #Kilinochchi
Mayoorikka
1 hour ago
மரணம் நிச்சயம் - மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை! (வீடியோ இணைப்பு)

எலிக்காய்ச்சல் அறிகுறி தென்பட்டால் உடனடியாக வைத்தியசாலை நாடி உயிரிழப்பை தவிர்க்க வேண்டும் என கிளிநொச்சி பிராந்திய பதில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் சிவஞானசுந்தரம் சேரலாதன் தெரிவித்துள்ளார்.

 கிளிநொச்சி மாவட்டத்தின் வெள்ள நிலைமையின் பின்பு மக்களுக்கு தெளிவூட்டுவது தொடர்பான ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

 குறித்த ஊடக சந்திப்பினை கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் பதில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் சிவஞான சுந்தரம் சேரலாதன் மற்றும் மாவட்ட சமுதாய மருத்துவர் வைத்தியர் திருமகள் சிவசங்கர் ஆகியோர் இணைந்து நடாத்தினர் இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

 தற்போது வெள்ளம் வடிந்து மக்கள் வீடுகளுக்கு செல்கின்ற நிலையில் நீர்ச்சிரங்கு ஏற்படுவதை தவிர்க்க பாதங்களை மெல்லிய சுடுதண்ணீரில் கொண்டிஸ் பளிங்குகளை இட்டு பாதங்களை கழுவினால் நீர்ச்சிரங்கு இல்லாது போகும் .

 அத்துடன் வெள்ளத்தின் பின்பு எலிக்காய்ச்சல் பரவும் நிலை காணப்படுகின்றது. யாழ்ப்பாணத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
சிறப்பு கட்டுரை