வடகிழக்குப் பருவப்பெயர்ச்சி - நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை
#SriLanka
#people
#Rain
#Warning
Prasu
54 minutes ago
எதிர்வரும் நாட்களில் இலங்கை முழுவதும் வடகிழக்குப் பருவப்பெயர்ச்சி நிலைமை படிப்படியாக நிலைபெறும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக, டிசம்பர் 04ம் திகதி முதல் நாட்டில், குறிப்பாக வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் மழையுடனான வானிலை அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இது தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்படும் எதிர்கால முன்னறிவிப்புகள் மற்றும் அறிவிப்புகள் குறித்து அவதானத்துடன் இருக்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
(வீடியோ இங்கே )