பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு சமைத்த உணவினை கிராம அலுவலர்கள் ஊடாக மட்டுமே வழங்க வேண்டும்

#SriLanka
Mayoorikka
43 minutes ago
பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு சமைத்த உணவினை கிராம அலுவலர்கள் ஊடாக மட்டுமே வழங்க வேண்டும்

யாழ்ப்பாண மாவட்ட வெள்ள அனர்த்த உணவு விநியோகம் தொடர்பாக அரசாங்க அதிபரின் அறிவித்தல் யாழ்ப்பான மாவட்டத்தில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டு பாதுகாப்பு நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கான சமைத்த உணவு கிராம அலுவலர்கள் மற்றும் பிரதேச செயலாளர்கள் ஊடாக மட்டுமே வழங்குவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்து.

 வேறு எவரும் சமைத்த உணவினை பாதுகாப்பு நிலையங்களில் தங்கி உள்ளவர்களுக்கு வழங்க முடியாது.

பாதுகாப்பு நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு உணவு வழங்குவதற்காக அரசாங்கத்தினால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதன் காரணமாக வேறு எவரும் பாதுகாப்பு நிலையங்களில் தங்கியிருப்பவர்களுக்கு சமைத்த உணவு வழங்க அனுமதிக்கப்படவில்லை என்பதுடன் இதனால் தேவையற்ற சமைத்த உணவு விரயங்களை தவிர்த்துக் கொள்ள முடியும்.

 அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டு நண்பர்கள் ,உறவினர் வீடுகள் மற்றும் தங்களுடைய வீடுகளில் இருப்பவர்கள் தங்களுக்குரிய சமைத்த உணவு தேவையினை கிராம அலுவலரிடம் தெரிவிப்பதன் மூலம் பெற்றுக் கொள்ளலாம். அல்லது உலர்உணவு நிவாரணத்தை இனிவரும் காலங்களில் பெற்றுக்கொள்ள முடியும்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

அனுசரணை

images/content-image/1754511373.jpg


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
சிறப்பு கட்டுரை