மஹியங்கனை ஆதார வைத்தியசாலை சேவைகள் மீண்டும் ஆரம்பம்
#SriLanka
#Hospital
#Disaster
#Reopen
Prasu
51 minutes ago
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மஹியங்கனை ஆதார வைத்தியசாலை சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என்று சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
சுத்தம் செய்யும் பணிகள் இராணுவத்தினரின் ஒத்துழைப்புடன் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
மேலும், மகாவலி கங்கைக்கு அருகில் வைத்தியசாலை அமைந்துள்ளதால், வைத்தியசாலை வளாகத்தினுள் பெருமளவான மண் மற்றும் சேறு படிந்துள்ளமையினால் சுத்தம் செய்யும் பணிகள் சற்றுச் சிரமமாக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், நாளை வெளிநோயாளர் பிரிவு, ஆரம்ப சிகிச்சைப் பிரிவு மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு ஆகிய சேவைகளை முழுமையாக ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க குறிப்பிட்டுள்ளார்.
(வீடியோ இங்கே )