பெங்களூருவில் கொள்ளையடிக்கப்பட்ட 7.11 கோடி ரூபாய் பணம் மீட்பு
#India
#Arrest
#Robbery
#money
#Bengaluru
Prasu
1 month ago
கடந்த வாரம் இந்தியாவின் மத்திய வங்கியின் அதிகாரிகள் போல வேடமிட்டு வந்த ஆயுதமேந்திய நபர்கள் 7.11 கோடி ரூபாயை கொள்ளையடித்து சென்றனர்.
வங்கி கிளைகளுக்கு இடையே பணத்தை பரிமாற்றுவதற்கு சென்ற போது SUV ரக வாகனத்தில் வந்த ஆறு பேர் கொண்ட குழுவினர் கொள்ளையடித்துச் சென்றனர்.
ஆரம்பத்தில் மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து 5.76 கோடி பணம் மீட்கப்பட்டது.
தற்போது 9 பேர் கைது செய்யப்பட்டு கொள்ளையடிக்கப்பட்ட ரூ.7.11 கோடியை முழுவதுமாக மீட்டுள்ளதாக பெங்களூரு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
(வீடியோ இங்கே )