இதய அறுவை சிகிச்சைக்காக காத்திருக்கும் 5000 நோயாளிகள்!
#SriLanka
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
2 hours ago
கொழும்பு தேசிய மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சைக்காக கிட்டத்தட்ட 5,000 நோயாளிகள் தற்போது காத்திருப்புப் பட்டியலில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (RTI) கீழ் பெறப்பட்ட தரவுகளிலிருந்து இந்த தகவல் வெளியாகியுள்ளது.
காத்திருப்பவர்களில் சிலர் அறுவை சிகிச்சைக்காக நான்கு ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டியிருக்கும் என்று மருத்துவர்களின் தொழிற்சங்க கூட்டணியின் தலைவர் டாக்டர் சமல் சஞ்சீவ கூறியுள்ளார்.மருத்துவமனையில் உள்ள ஐந்து இதய அறுவை சிகிச்சை வார்டுகளில் ஏராளமான நோயாளிகள் காத்திருப்பு பட்டியலில் இருப்பதாக கூறப்படுகிறது.
(வீடியோ இங்கே )
அனுசரணை
