பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் மலேசிய நாட்டவர் ஒருவர் கைது!
#SriLanka
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
1 hour ago
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) சுமார் 5 கிலோ கொக்கைன் போதைப்பொருளை கடத்த முயன்ற மலேசிய நாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களின் மதிப்பு 250 மில்லியன் ரூபாய் என கூறப்படுகிறது. 25 வயதுடைய நபர் இலங்கை சுங்கத்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் அபுதாபியிலிருந்து புறப்பட்ட விமானத்தில் இரவு 8.20 மணிக்கு விமான நிலையத்தை வந்தடைந்த நிலையில், கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபரும் கைப்பற்றப்பட்ட கொகைனும் கட்டுநாயக்க விமான நிலைய காவல்துறையின் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
(வீடியோ இங்கே )
அனுசரணை
