உயர்தர பரீட்சைக்கு தயாரான மாணவி திடீரென உயிரிழப்பு!

#SriLanka #School #Examination #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
2 hours ago
உயர்தர பரீட்சைக்கு தயாரான மாணவி திடீரென உயிரிழப்பு!

உயர்தர  பரீட்சைக்கு உயிரியல் பிரிவில் தோற்றவிருந்த மாணவி ஒருவர் நேற்று திடீரென உயிரிழந்துள்ளார். தம்புள்ளை மேல் பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய தருஷி சாமோடி என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

 பரீட்சைக்கு படித்துக்கொண்டிருந்த அவர், காலையில் எழுந்திருக்காத நிலையில் பெற்றோர் அவரை தம்புள்ளை ஆதார மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். 

 மருத்துவர்கள் அவரைப் பரிசோதித்த நிலையில், மருத்துவமனைக்குக் கொண்டுவருவதற்கு முன்பே அவர் இறந்துவிட்டதாகக் கூறியுள்ளனர்.

 சம்பவத்தைத் தொடர்ந்து, தம்புள்ளை காவல்துறை அதிகாரிகள் குழு மாணவியின் வீட்டிற்குச் சென்று ஆய்வு செய்தபோது, ​​சந்தேகத்திற்குரிய எதுவும் கிடைக்கவில்லை என்று தெரிவித்துள்ளனர்.

 மாணவியின் மரணத்திற்கான காரணம் தெரியவராத நிலையில் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

அனுசரணை

images/content-image/1754511373.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!