அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பை சந்திக்கும் சிரிய ஜனாதிபதி அகமது அல்-ஷாரா!
#SriLanka
#Trump
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
2 hours ago
சிரிய ஜனாதிபதி அகமது அல்-ஷாரா மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இடையேயான சந்திப்பு இன்று (10) வெள்ளை மாளிகையில் நடைபெற உள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் சிறப்பு அழைப்பின் பேரில் சிரிய ஜனாதிபதி அமெரிக்காவிற்கு விஜயம் செய்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிரிய ஜனாதிபதி ஒருவர் அமெரிக்க ஜனாதிபதி இல்லமான வெள்ளை மாளிகைக்கு விஜயம் செய்வது இதுவே முதல் முறை என்று வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த கலந்துரையாடலின் போது சிரியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்துவது மற்றும் சிரியாவிற்கும் இஸ்ரேலுக்கும் இடையில் நடந்து வரும் மோதலை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து அதிக கவனம் செலுத்தப்படும் என்றும் கூறப்படுகிறது.
(வீடியோ இங்கே )
அனுசரணை
