கட்டைக்காடு சென்மேரிஸ் வி.கழகத்தால் கசிப்பு முற்றுகை-சந்தேக நபர்கள் தப்பி ஓட்டம்!

#SriLanka #ADDA #shelvazug #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAPOOJA
Abi
1 hour ago
கட்டைக்காடு சென்மேரிஸ் வி.கழகத்தால் கசிப்பு முற்றுகை-சந்தேக நபர்கள் தப்பி ஓட்டம்!

வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு சென்மேரிஸ் விளையாட்டுக் கழகம் சட்டவிரோத செயற்பாடுகளை தமது பகுதியில் முற்றாக அழித்தொழிப்பது என்னும் தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது

இதன் ஒரு பகுதியாக இன்று காலை சென்மேரிஸ் விளையாட்டுக் கழகத்தின் நிர்வாகத்திற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் கசிப்பு குடிப்பதற்காக பலர் கூடியிருந்த காட்டுப்பகுதி திடீரென சென்மேரிஸ் விளையாட்டுக் கழகத்தால் முற்றுகையிடப்பட்டது.

இந்த முற்றுகையின் போது கசிப்பு பரலை கைவிட்டு அங்கு கூடியிருந்தவர்கள் தப்பிச் சென்றுள்ளதுடன். 

images/content-image/2024/08/1762583520.jpg

கசிப்புடன் கசிப்பு பரல் சென்மேரிஸ் விளையாட்டுக் கழகத்தால் கைப்பற்றப்பட்டு எரியூட்டப்பட்டுள்ளது இந்த நடவடிக்கை சென்மேரிஸ் விளையாட்டுக் கழக தலைவரும் பருத்தித்துறை பிரதேசசபை உறுப்பினருமான பி.அலஸ்ரன் தலைமையில் முன்னெடுக்கப்பட்டது

தமது எல்லைக்குள் இடம்பெறும் சட்டவிரோத செயற்பாடுகளை உடன் நிறுத்துமாறும் மீறினால் கைது செய்து பொலிசாரிடம் ஒப்படைப்போமென சென்மேரிஸ் விளையாட்டுக் கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது

images/content-image/2024/08/1762583610.jpg

கழகத்தின் முன்மாதிரியான குறித்த செயற்பாட்டை பலரும் பாராட்டி வருகின்றனர்.

                                                                        

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

அனுசரணை

images/content-image/1754511373.jpg





உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!