பிலிப்பைன்ஸில் பேரனர்த்தம் - 114 க்கும் மேற்பட்டோர் பலி!
#SriLanka
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
2 hours ago
பிலிப்பைன்ஸில் 114 க்கும் மேற்பட்டோர் கால்மேகி புயலால் உயிரிழந்துள்ளனர்.
நேற்று (05) மத்திய பிலிப்பைன்ஸைத் தாக்கிய புயல், இந்த ஆண்டு இப்பகுதியைத் தாக்கிய மிக வலிமையான புயல் என்று உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
கல்மேகி புயலால் பிராந்தியத்தின் அதிக மக்கள் தொகை கொண்ட தீவான செபு நகரம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது, அங்கு மட்டும் 71 பேர் உயிரிழந்துள்ளனர், 127 பேர் காணாமல் போயுள்ளனர் மற்றும் 82 பேர் காயமடைந்துள்ளனர்.
நீரில் மூழ்கியதால் பெரும்பாலான இறப்புகள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த புயல் இன்று (06) காலை பிலிப்பைன்ஸை விட்டு வெளியேறி மத்திய வியட்நாமை நோக்கி நகர்ந்து வருவதாகக் கூறப்படுகிறது.
சூறாவளி காரணமாக தாய்லாந்தில் திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
(வீடியோ இங்கே )
அனுசரணை
