இலங்கையில் உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவும் புதிய மருந்து கண்டுப்பிடிப்பு!

#SriLanka #doctor #Medicine #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
3 hours ago
இலங்கையில் உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவும் புதிய மருந்து கண்டுப்பிடிப்பு!

உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவும் ஒரு புதிய மருந்தை களனி பல்கலைக்கழகத்தின் ராகம மருத்துவ பீடத்தின் மருத்துவ பீடத்தைச் சேர்ந்த மருத்துவ ஆராய்ச்சிக் குழு கண்டுப்பிடித்துள்ளது. 

புதிதாக உருவாக்கப்பட்ட இந்த மருந்து, உயர் இரத்த அழுத்த நோயாளிகளுக்கு பொதுவாக பரிந்துரைக்கப்படும் மூன்று மாத்திரைகள் என்ற விதிமுறையை மாற்றும்.

அதேநேரம்  மூன்று வகையான உயர் இரத்த அழுத்த எதிர்ப்பு மருந்துகளை ஒரே மாத்திரையாக வழங்க முன்மொழியும் எனத் தெரிவிக்கப்படுகிறது. 

மருத்துவ கண்டுபிடிப்புகளின்படி, இந்த மருந்து உயர் இரத்த அழுத்தம் காரணமாக இரத்த நாளங்கள் வெடிப்பதால் ஏற்படும் பக்கவாத அபாயத்தை தோராயமாக 60 சதவீதம் குறைக்க முடியும் எனத் தெரிவிக்கப்படுகிறது. 

இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள நரம்பியல் நிபுணர் டாக்டர் பிம்சாரா சேனநாயக்க, உயர் இரத்த அழுத்தம் தொடர்பான சிக்கல்களால் பாதிக்கப்பட்ட நோயாளிகளிடையே மீண்டும் மீண்டும் பக்கவாதம் ஏற்படுவதைத் தடுப்பதில் இந்த ஆய்வு குறிப்பிடத்தக்க ஆற்றலைக் காட்டுகிறது என்றார்.

இரத்த அழுத்தத்தை திறம்பட கட்டுப்படுத்துவதன் மூலம், இந்த புதிய மருந்து மீண்டும் மீண்டும் வருவதற்கான அபாயத்தை 60 சதவீதம் வரை குறைக்க முடியும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். 

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

அனுசரணை

images/content-image/1754511373.jpg


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!