கனடாவில் வலி நிவாரணி மருந்துகளுக்கு பற்றாக்குறை

#Canada #government #Warning #Medicine #Drug shortage
Prasu
2 hours ago
கனடாவில் வலி நிவாரணி மருந்துகளுக்கு பற்றாக்குறை

கனடாவில் ஆக்சிகோடைன் கலந்த வலி நிவாரணி மருந்துகளின் பற்றாக்குறை அடுத்த ஆண்டுவரை நீடிக்கும் என மருந்தக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

அதே சமயம், கோடீன் கலந்த மற்றொரு வகை வலி நிவாரணி மருந்துகளின் விநியோகம், கோடை காலத்தில் ஏற்பட்ட தேசிய அளவிலான தடங்கலுக்குப் பின்னர், தற்போது மேம்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த ஜூலை மாதம், ஆக்சிகோடைன் மற்றும் அசிடமினோஃபென் கலந்த மருந்துகளான பலரும் அறிந்த பெயரான பெர்கோசெட் உள்ளிட்டவை பற்றாக்குறை குறித்த அறிவிப்பை கனடிய சுகாதார திணைக்களம் வெளியிட்டது.

இதனுடன், டைலனோல் 3 என அறியப்படும் கோடீன் கலந்த மருந்துகளிலும் பற்றாக்குறையாக காணப்பட்டது. இந்த பிரச்சனை உற்பத்தி தடை காரணமாக ஏற்பட்டதாகவும், தொடக்கத்தில் இது இலையுதிர் காலத்துக்குள் சரியாகும் என எதிர்பார்க்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இம்மருந்துகள் திடீர் காயங்கள் முதல் நீண்டகால முதுகுவலி வரை பல்வேறு நோய்களுக்கு வழங்கப்படுகின்றன. கோடீன் கலந்த டைலனோல் 3 போன்ற மருந்துகள் மீண்டும் கிடைக்கத் தொடங்கியுள்ளன.

images/content-image/1762327225.jpg

------------------------------------------------------------------------------------

A shortage of oxycodone-based painkillers in Canada could last into next year, pharmacists are warning.

Meanwhile, supplies of another type of painkiller, codeine, are reportedly improving after a national shortage over the summer.

Last July, Health Canada announced a shortage of oxycodone and acetaminophen, including the popular brand Percocet.

In addition, there has been a shortage of codeine-based painkillers, known as Tylenol 3. The problem was caused by a manufacturing outage and was initially expected to be resolved by the fall.

The drugs are used to treat a variety of conditions, from acute injuries to chronic back pain. Drugs like Tylenol 3 with codeine are now back in stock.

------------------------------------------------------------------------------------

කැනඩාවේ ඔක්සිකෝඩෝන් මත පදනම් වූ වේදනා නාශක හිඟයක් ලබන වසර දක්වා පැවතිය හැකි බව ඖෂධවේදීන් අනතුරු අඟවයි.

මේ අතර, ගිම්හානයේදී ජාතික හිඟයකින් පසු තවත් වේදනා නාශක වර්ගයක් වන කෝඩීන් සැපයුම වැඩිදියුණු වෙමින් පවතින බව වාර්තා වේ.

පසුගිය ජූලි මාසයේදී, ජනප්‍රිය වෙළඳ නාමයක් වන ඔක්සිකෝඩෝන් මත පදනම් වූ ඇසිටමිනොෆෙන් ඖෂධයක් වන පර්කොසෙට් හිඟයක් සෞඛ්‍ය කැනඩාව නිවේදනය කළේය.

ඊට අමතරව, ටයිලෙනෝල් 3 ලෙසද හැඳින්වෙන කෝඩීන් මත පදනම් වූ වේදනා නාශක හිඟයක් පවතී. ගැටළුව නිෂ්පාදන ඇනහිටීමක් නිසා ඇති වූ අතර එය සරත් සමය වන විට විසඳෙනු ඇතැයි මුලින් අපේක්ෂා කරන ලදී.

උග්‍ර තුවාලවල සිට නිදන්ගත පිටුපස වේදනාව දක්වා විවිධ තත්වයන්ට ප්‍රතිකාර කිරීම සඳහා ඖෂධ භාවිතා කරනු ලැබේ. කෝඩීන් සමඟ ටයිලෙනෝල් 3 වැනි ඖෂධ දැන් නැවත තොගයේ ඇත.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!