ராஜபக்ஷக்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தற்போதிருக்கும் வாழ்க்கையும் இல்லாமல் போய்விடும்!

#SriLanka
Mayoorikka
2 hours ago
ராஜபக்ஷக்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தற்போதிருக்கும் வாழ்க்கையும் இல்லாமல் போய்விடும்!

ராஜபக்ஷக்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நாட்டுக்கு சோக அறிவிப்பையே வெளியிட நேரிடும். மக்களுக்கு தற்போதிருக்கும் வாழ்க்கையும் இல்லாமல் போய்விடும். அவர்களின் ஆட்சியை வெறுக்கிறேன் என பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

 தற்போதைய எதிர்க்கட்சியினருக்கு மீண்டும் ஆட்சி கிடைக்கக் கூடாது என்று பிரார்த்திப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும்போதே இதனைக் குறிப்பிட்டார். இதுதொடர்பில் அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

 நாட்டில் இடம்பெறும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களை தேசியப் பாதுகாப்பு அச்சுறுத்தல் என்ற கோணத்திலேயே பார்க்க முடியாது. பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சும் தனியாக இயங்குகிறது. பாதாளக் குழுக்கள் எல்லாம் அந்தக் காலத்தில் ஆரம்பிக்கப்பிட்டவையாகும். இருந்தபோதும், பாதாளக் குழுக்களின் செயற்பாடுகளை ஒழிப்பதற்காக அரசாங்கம் அக்கறையுடன் செயற்படுகிறது என்பதை நான் பயமின்றி கூறிக்கொள்ள விரும்புகிறேன். 

 அரசாங்கத்தின் இந்த செயற்பாடுகள் வெற்றிகரமாக இடம்பெறுகிறது என்பது வெளிப்படையாக தெரியவில்லை. இருந்தபோதும் அரசாங்கத்தின் முயற்சிகளை வரவேற்க வேண்டும். ஒருசில எதிர்க் கட்சியினர் அதிர்ச்சியில் இருக்கிறார்கள்.

 கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்பே எதிர்க் கட்சிகளிடமிருந்து விலகி தனித்து செயற்பட ஆரம்பித்து விட்டேன். 15 வருடங்கள் அவர்களுடன் இருந்திருக்கிறேன். அவர்களின் செயற்பாடுகளினால் நாட்டுக்கு எந்த பயனும் இல்லை என்பதை புரிந்துகொண்டதாலேயே அவர்களிடமிலுருந்து விலகி வந்தேன். 

அதனால், மீண்டும் அவர்களுடன் இணைந்துகொள்ளுமளவுக்க நான் முட்டாளும் இல்லை. ஒருவேளைஇ ராஜபக்ஷக்கள் ஆட்சி வந்தால் நாட்டுக்கு சோக அறிவிப்பே வெளியிட நேரிடும்.மக்களுக்கு தற்போதிருக்கும் வாழ்க்கையும் இல்லாமல் போயிவிடும். ராஜபக்ஷக்களின் ஆட்சி மீது கோபம் எதுவும் இல்லை. அவர்களின் ஆட்சியை வெறுக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

அனுசரணை

images/content-image/1754511373.jpg


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!