ஒரு மாத கால அரசாங்க முடக்கத்தால் 7 பில்லியன் டாலர்களை இழந்த அமெரிக்கா
அரசாங்கத்தை தொடர்ந்து செயல்பட வைப்பதற்கான பல நிதி மசோதாக்களில் செனட்டில் குடியரசுக் கட்சியினரும், ஜனநாயகக் கட்சியினரும் உடன்படாததால் அமெரிக்க அரசாங்கத்தின் பெரும் பகுதி கடந்த அக்டோபர் 1 முதல் மூடப்பட்டது.
அக்டோபர் மாத இறுதி வரை அரசாங்க நிதியுதவி மற்றும் ஆண்டு இறுதியில் காலாவதியாகவுள்ள மத்திய சுகாதார மானியங்களை நீட்டிப்பது உள்ளிட்ட ஜனநாயகக் கட்சியினரால் முன்மொழியப்பட்ட மசோதாவைத் தடுக்க குடியரசுக் கட்சியினர் வாக்களித்தனர். இதன் காரணமாக அரசு துறைகளில் பணிகள் நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் கடந்த 31 நாட்களாக தீர்வு எட்டப்படாமல் பணி நிறுத்தம் தொடர்ந்து வருகிறது. இந்த பணிநிறுத்தத்தால் அமெரிக்க பொருளாதாரத்திற்கு 7 பில்லியன் டாலர்களுக்கும் மேல் இழப்பு ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
காங்கிரஸ் பட்ஜெட் அலுவலகம் இதை மதிப்பிட்டுள்ளது. இது இந்திய ரூபாய் மதிப்பில் ரூ. 62,149 கோடிக்கும் அதிகமாகும்.
பணிநிறுத்தம் இப்படியே தொடர்ந்தால் மேலும் ஆறு வாரங்களில் 11 பில்லியன் டாலர்களையும் எட்டு வாரங்களில் 14 பில்லியன் டாலர்களையும் இழக்க நேரிடும் என பட்ஜெட் அலுவலகம் எச்சரித்துள்ளது.

------------------------------------------------------------------------------------
The US government has been largely shut down since October 1 after Republicans and Democrats in the Senate failed to agree on several funding bills to keep the government running.
Republicans voted to block a bill proposed by Democrats that would have extended government funding until the end of October and federal health care subsidies that expire at the end of the year. This led to a shutdown of government departments.
In this situation, the shutdown has been ongoing for the past 31 days without a solution being found. The shutdown is estimated to have cost the US economy more than $7 billion.
The Congressional Budget Office has estimated this. This is more than Rs. 62,149 crore in Indian rupees.
The Budget Office has warned that if the shutdown continues like this, it could cost $11 billion in six more weeks and $14 billion in eight weeks.
------------------------------------------------------------------------------------
සෙනෙට් සභාවේ රිපබ්ලිකන්වරුන් සහ ඩිමොක්රටික්වරුන් රජය පවත්වාගෙන යාම සඳහා අරමුදල් පනත් කිහිපයක් සම්බන්ධයෙන් එකඟ වීමට අපොහොසත් වීමෙන් පසු ඔක්තෝබර් 1 වන දින සිට එක්සත් ජනපද රජය බොහෝ දුරට වසා දමා ඇත.
ඔක්තෝබර් අවසානය දක්වා රජයේ අරමුදල් සහ වසර අවසානයේ කල් ඉකුත් වන ෆෙඩරල් සෞඛ්ය සේවා සහනාධාර දීර්ඝ කරන ඩිමොක්රටික්වරුන් විසින් යෝජනා කරන ලද පනත් කෙටුම්පතක් අවහිර කිරීමට රිපබ්ලිකන්වරු ඡන්දය දුන්හ. මෙය රජයේ දෙපාර්තමේන්තු වසා දැමීමට හේතු විය.
මෙම තත්වය තුළ, විසඳුමක් සොයා නොගෙන පසුගිය දින 31 තුළ වසා දැමීම අඛණ්ඩව සිදුවෙමින් පවතී. වසා දැමීම හේතුවෙන් එක්සත් ජනපද ආර්ථිකයට ඩොලර් බිලියන 7 කට වඩා වැඩි මුදලක් වැය වී ඇති බවට ගණන් බලා ඇත.
කොංග්රස් අයවැය කාර්යාලය මෙය ඇස්තමේන්තු කර ඇත. මෙය ඉන්දියානු රුපියල්වලින් රුපියල් කෝටි 62,149 කට වඩා වැඩිය.
වසා දැමීම මේ ආකාරයෙන් දිගටම පැවතුනහොත්, තවත් සති හයකින් ඩොලර් බිලියන 11 ක් සහ සති අටකින් ඩොලර් බිලියන 14 ක් වැය විය හැකි බවට අයවැය කාර්යාලය අනතුරු අඟවා ඇත.
(வீடியோ இங்கே )