போதைப்பொருள் கொண்டுச் சென்றதாக சந்தேகிக்கப்படும் மீன்பிடி படகு தொடர்பில் விசாரணை!
#SriLanka
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
15 hours ago
போதைப்பொருள் கொண்டு சென்றதாக சந்தேகிக்கப்படும் பல நாள் மீன்பிடி படகு கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட நிலையில், தற்போது திக்கோவிட்ட மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
நேற்று நடத்தப்பட்ட நடவடிக்கையின் போது போதைப்பொருள் கொண்டு சென்றதாக சந்தேகிக்கப்படும் பல நாள் மீன்பிடி படகு ஒன்றை கடற்படையினர் கைப்பற்றியிருந்தனர்.
அத்துடன் கப்பலில் இருந்த 06 சந்தேகநபர்களையும் கைது செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து குறித்த படகு திக்கோவிட்ட மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
(வீடியோ இங்கே )
அனுசரணை
