23 வயது பேரனை கத்தியால் குத்திக் கொலை செய்த 76 வயது தாத்தா
கேகாலை மாவட்டம் புலத்கொஹுபிட்டிய எதுராபொல பகுதியில் கொலைச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
வானொலியில் பாட்டு சத்தமாக ஒலித்ததால் ஏற்பட்ட தகராறிலே குறித்த இளைஞன் குத்திக் கொல்லப்பட்டதாக புலத்கோஹுபிட்டிய போலீசார் தெரிவித்தனர்
76 வயதுடைய தாத்தா குடும்ப தகராறு காரணமாக நெருங்கிய உறவினரான 23 வயதான பேரன் முறையான மாயாகிருஷ்ணன் திலான் என்பவரை கூர்ந்த கத்தியால் குத்தி கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளதுடன் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்த இளைஞன் நேற்றைய தினம் ஹட்டனில் நடந்த கவணயீர்ப்பு போராட்டத்தில் மலையக மக்களுக்காக குரல் கொடுத்த இளைஞர் என்பது குறிப்பிடத்தக்கது.

------------------------------------------------------------------------------------
A murder incident has been reported in the Eduarapola area of Bulathkohupitiya in Kegalle district.
The Bulathkohupitiya police said that the youth was stabbed to death in a dispute over a loud song on the radio.
It is reported that a 76-year-old grandfather stabbed his close relative, 23-year-old grandson, Mayakrishnan Dilan, to death with a sharp knife due to a family dispute.
The police have arrested the suspect and it is reported that steps are being taken to produce him in court.
It is noteworthy that the deceased youth was a youth who spoke out for the hill people during the protest held in Hatton yesterday.
------------------------------------------------------------------------------------
කෑගල්ල දිස්ත්රික්කයේ බුලත්කොහුපිටියේ එඩුරපොල ප්රදේශයේ මිනීමැරුම් සිද්ධියක් වාර්තා වී තිබේ.
ගුවන් විදුලියේ ශබ්ද නගා වාදනය වන ගීතයක් සම්බන්ධයෙන් ඇති වූ ආරවුලකදී තරුණයා පිහියෙන් ඇන ඝාතනය කර ඇති බව බුලත්කොහුපිටිය පොලිසිය පැවසීය.
පවුල් ආරවුලක් හේතුවෙන් 76 හැවිරිදි සීයා කෙනෙකු තම සමීප ඥාතියෙකු වන 23 හැවිරිදි මුණුපුරා වන මායාක්රිෂ්ණන් ඩිලාන්ට තියුණු පිහියකින් පහර දී ඝාතනය කර ඇති බව වාර්තා වේ.
පොලිසිය සැකකරු අත්අඩංගුවට ගෙන ඇති අතර ඔහු අධිකරණයට ඉදිරිපත් කිරීමට පියවර ගනිමින් සිටින බව වාර්තා වේ.
මියගිය තරුණයා ඊයේ හැටන් හි පැවති විරෝධතාවයේදී කඳුකර ජනතාව වෙනුවෙන් කතා කළ තරුණයෙකු වීම විශේෂත්වයකි.
(வீடியோ இங்கே )