கனடாவில் இந்திய வம்சாவளி இளைஞருக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை
கடந்த 2022ம் ஆண்டு கனடாவில் இடம்பெற்ற கொலை வழக்கில் இந்திய வம்சாவளி இளைஞருக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கனடாவில் கடந்த 2022ம் ஆண்டு அக்டோபர் 17ம் திகதி, போலேவார்ட் பல்கலைக்கழகத்தில் உள்ள கோல்ப் கிளப் மைதானத்தில் 38 வயதான விஷால் வாலியா என்பவர் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்டார்.
அவரை கொலை செய்த நபர்கள் அங்கிருந்து தப்பியோடியபோது ஒரு வாகனத்திற்கு தீவைத்துவிட்டுச் சென்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய பொலிசார், கொலையாளிகளான இக்பால் காங்க்(24), டீன்ரே பாப்டிஸ்ட்(21) மற்றும் பல்ராஜ் பஸ்ரா(25) ஆகிய 3 பேரை அதிரடியாக கைது செய்தனர்.
அதனை தொடர்ந்து இக்பால் காங்கிற்கு 17 ஆண்டுகள் சிறை தண்டனையும், வானகத்திற்கு தீ வைத்த குற்றத்திற்காக கூடுதலாக 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது.
மற்றொரு குற்றவாளி டீன்ரே பாப்டிஸ்டுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
தொடர்ந்து இந்த வழக்கில் மூன்றாவதாக கைது செய்யப்பட்ட குற்றவாளியான இந்திய வம்சாவளி இளைஞர் பல்ராஜ் பஸ்ராவுக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

------------------------------------------------------------------------------------
A young man of Indian origin has been sentenced to 25 years in prison in a murder case that took place in Canada in 2022.
On October 17, 2022, 38-year-old Vishal Walia was shot and killed at the Golf Club at Boulevard University in Canada.
The perpetrators set fire to a vehicle as they fled the scene.
The police, who investigated the incident, arrested three murderers, Iqbal Kang (24), Deanray Baptiste (21) and Balraj Basra (25).
Subsequently, Iqbal Kang was sentenced to 17 years in prison and an additional 5 years in prison for the crime of setting fire to the sky.
The court sentenced another accused, Deanray Baptiste, to life imprisonment.
The court has sentenced Indian-origin youth Balraj Basra, the third accused arrested in the case, to 25 years in prison.
------------------------------------------------------------------------------------
2022 දී කැනඩාවේ සිදු වූ මිනීමැරුම් නඩුවකදී ඉන්දියානු සම්භවයක් ඇති තරුණයෙකුට වසර 25ක සිර දඬුවමක් නියම කර තිබේ.
2022 ඔක්තෝබර් 17 වන දින කැනඩාවේ බොලිවාර්ඩ් විශ්ව විද්යාලයේ ගොල්ෆ් සමාජයේදී 38 හැවිරිදි විශාල් වාලියා වෙඩි තබා ඝාතනය කරන ලදී.
අපරාධකරුවන් එම ස්ථානයෙන් පලා යන අතරතුර වාහනයකට ගිනි තබා ඇත.
සිද්ධිය විමර්ශනය කළ පොලිසිය, ඉක්බාල් කන්ග් (24), ඩීන්රේ බැප්ටිස්ට් (21) සහ බල්රාජ් බස්රා (25) යන මිනීමරුවන් තිදෙනෙකු අත්අඩංගුවට ගෙන තිබේ.
පසුව, අහසට ගිනි තැබීමේ වරදට ඉක්බාල් කන්ග්ට වසර 17ක සිර දඬුවමක් සහ තවත් වසර 5ක සිර දඬුවමක් නියම කරන ලදී.
තවත් විත්තිකරුවෙකු වන ඩීන්රේ බැප්ටිස්ට්ට අධිකරණය ජීවිතාන්තය දක්වා සිර දඬුවමක් නියම කළේය.
නඩුවේ අත්අඩංගුවට ගත් තුන්වන විත්තිකරු වන ඉන්දියානු සම්භවයක් ඇති තරුණ බල්රාජ් බස්රාට අධිකරණය වසර 25ක සිර දඬුවමක් නියම කර තිබේ.
(வீடியோ இங்கே )