நாளை வைத்தியர்கள் நாடு தழுவிய ரீதியில் தொழிற்சங்க நடவடிக்கை !
#SriLanka
#strike
#doctor
#ADDA
#shelvazug
#ADDAADS
#SHELVA
#SHELVAFLY
#ADDAFLY
#ADDAPOOJA
Abi
1 month ago
தன்னிச்சையான இடமாற்ற முறைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், நாளை (31) நாடு தழுவிய ரீதியில் தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பிக்கவுள்ளதாக அரசாங்க வைத்திய அதிகாரிகளின் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது.
இந்த இடமாற்ற முறைமை இன்று (30) நடைமுறைப்படுத்தப்பட்டால், நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலைகள் மற்றும் சுகாதார நிறுவனங்களில் ஏற்படக்கூடிய சேவை முடக்கத்திற்கான முழுப் பொறுப்பையும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஏற்க வேண்டும் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
குறித்த தொழிற்சங்க நடவடிக்கை தொடர்பில் நேற்று (29) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், அரசாங்க வைத்திய அதிகாரிகளின் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் பிரபாத் சுகததாச இந்தக் கருத்தைத் தெரிவித்தார்.
(வீடியோ இங்கே )
அனுசரணை
