கனடாவில் கொல்லப்பட்ட இந்திய இளம்பெண்ணின் புகைப்படத்தை வெளியிட்ட பொலிஸார்
கனடாவில், இந்திய வம்சாவளி இளம்பெண் ஒருவரை சக இந்தியர் ஒருவர் கொலை செய்த வழக்கில் அந்த இளம்பெண்ணின் புகைப்படம் வெளியாகியுள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை, கனடாவின் ரொரன்றோவிலுள்ள நார்த் யார்க்கில் வசித்துவந்த அமன்பிரீத் சைனி (27) என்னும் இந்திய வம்சாவளி இளம்பெண்ணின் உயிரற்ற உடல் பூங்கா ஒன்றில் கண்டெடுக்கப்பட்டது.
உடல் முழுவதும் பயங்கர காயங்களுடன் சைனியின் உடல் கண்டெடுக்கப்பட்ட நிலையில், பிராம்டனைச் சேர்ந்த இந்திய இளைஞரான மன்பிரீத் சிங் (27) என்பவர் சைனியைக் கொலை செய்திருக்கலாம் என பொலிசார் கருதுகிறார்கள்.
மன்பிரீத் சிங் மீது கனடா முழுமைக்குமான கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மன்பிரீத் சிங் கனடாவிலிருந்து தப்பியோடியிருக்கலாம் என தங்களுக்கு தகவல் கிடைத்துள்ளதாக தற்போது பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.
ஆகவே, மன்பிரீத்தைப் பிடிக்க உதவுமாறு இந்திய பொலிசாரை கனேடிய பொலிசார் கேட்டுக்கொண்டுள்ளார்கள்.

------------------------------------------------------------------------------------
A photo of the young woman of Indian origin has been released in Canada in the case of the murder of a young woman of Indian origin by a fellow Indian.
Last Tuesday, the lifeless body of a young woman of Indian origin named Amanpreet Saini (27), who lived in North York, Toronto, Canada, was found in a park.
After Saini's body was found with severe injuries all over her body, police believe that Manpreet Singh (27), an Indian youth from Brampton, may have murdered Saini.
A Canada-wide arrest warrant has been issued for Manpreet Singh.
Police have now said that they have received information that Manpreet Singh may have fled Canada.
Therefore, Canadian police have asked Indian police to help catch Manpreet.
------------------------------------------------------------------------------------
ඉන්දියානු සම්භවයක් ඇති තරුණියක් සෙසු ඉන්දියානුවෙකු විසින් ඝාතනය කිරීමේ නඩුවේදී ඉන්දියානු සම්භවයක් ඇති තරුණියගේ ඡායාරූපයක් කැනඩාවේදී නිකුත් කර තිබේ.
පසුගිය අඟහරුවාදා, කැනඩාවේ ටොරොන්ටෝ හි උතුරු යෝර්ක් හි ජීවත් වූ අමන්ප්රීත් සයිනි (27) නම් ඉන්දියානු සම්භවයක් ඇති තරුණියකගේ අප්රාණික මළ සිරුර උද්යානයකින් සොයා ගන්නා ලදී.
සයිනිගේ සිරුර ඇගේ සිරුර පුරා දරුණු තුවාල සහිතව සොයා ගැනීමෙන් පසු, බ්රැම්ප්ටන්හි ඉන්දියානු තරුණයෙකු වන මන්ප්රීත් සිං (27) සයිනි ඝාතනය කර ඇති බවට පොලිසිය විශ්වාස කරයි.
මන්ප්රීත් සිං සඳහා කැනඩාව පුරා අත්අඩංගුවට ගැනීමේ වරෙන්තුවක් නිකුත් කර ඇත.
මන්ප්රීත් සිං කැනඩාවෙන් පලා ගොස් ඇති බවට තොරතුරු ලැබී ඇති බව පොලිසිය දැන් පවසා තිබේ.
එබැවින්, මන්ප්රීත් අල්ලා ගැනීමට උදව් කරන ලෙස කැනේඩියානු පොලිසිය ඉන්දීය පොලිසියෙන් ඉල්ලා තිබේ.
(வீடியோ இங்கே )