உலக உணவுத் திட்டத்தின் பிரதிநிதிகளுக்கும் பிரதமரின் செயலாளருக்கும் இடையிலான சந்திப்பு!

#SriLanka #PrimeMinister #ADDA #shelvazug #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
3 hours ago
உலக உணவுத் திட்டத்தின் பிரதிநிதிகளுக்கும் பிரதமரின் செயலாளருக்கும் இடையிலான சந்திப்பு!

உலக உணவுத் திட்டத்தின் (World Food Programme - Sri Lanka) இலங்கைக்கான பிரதிநிதியாகப் பதவியேற்ற பிலிப் வார்ட் (Philip Ward) மற்றும் பிரதி இயக்குநர் ரொபர்ட் ஒலிவர் (Robert Oliver) ஆகிய இருவரும் இன்று (27) பிரதமரின் அலுவலகத்தில், பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி அவர்களைச் சந்தித்தனர்.

1968ஆம் ஆண்டு முதல் இலங்கையில் செயற்பட்டு வரும் உலக உணவுத் திட்டம் (WFP), இலங்கையில் உணவுப் பாதுகாப்பு, போசாக்குப் பாதுகாப்பு, பொருளாதார மற்றும் காலநிலைச் சவால்களை எதிர்கொள்ளும் சமூகங்களின் தாங்குதன்மை (Resilience) ஆகியவற்றை வலுப்படுத்துவதில் ஆதரவை வழங்கி வருகிறது.

2023 - 2027ஆம் ஆண்டுக்கான உலக உணவுத் திட்டத்தின் (WFP) வியூகத் திட்டம் (Strategic Plan) மற்றும் அதன் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டதுடன், குறிப்பாக உணவுப் பாதுகாப்பு மற்றும் போசாக்குப் பாதுகாப்பிற்கான அரசாங்கத்தின் எதிர்கால வேலைத்திட்டத்திற்கமைய உலக உணவுத் திட்டத்துடன் (WFP) இணைந்து செயற்படுவது குறித்து கலந்துரையாடப்பட்டது.

பிரதமரின் மேலதிகச் செயலாளர் திருமதி சாகரிகா போகஹவத்த மற்றும் சிரேஷ்ட உதவிச் செயலாளர் திரு. எம்.எச்.ஏ.எம். ரிஃப்லான் ஆகியோரும் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டனர்.

                                                                             

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

அனுசரணை

images/content-image/1754511373.jpg



உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!