உலகின் மிகச் சிறந்த சுற்றுலா தளங்களுக்குள் யாழ்ப்பாணம் உள்ளடக்கம்!

#SriLanka #Jaffna #Tourism
Mayoorikka
2 hours ago
உலகின் மிகச் சிறந்த சுற்றுலா தளங்களுக்குள் யாழ்ப்பாணம் உள்ளடக்கம்!

உலகளாவிய பயண வெளியீடான லோன்லி பிளானட் (Lonely Planet),2026 ஆம் ஆண்டிற்கான உலகில் பார்வையிட சிறந்த 25 இடங்களில் ஒன்றாக யாழ்ப்பாணத்தை பெயரிட்டுள்ளது.

 இலங்கையின் செழுமையான கலாச்சார மற்றும் வரலாற்றுப் பாரம்பரியத்தை அடிப்படையாகக் கொண்டு யாழ்ப்பாணம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. 

 சுற்றுலா மேம்பாட்டு உத்தியின் ஒரு பகுதியாகப் பிராந்தியப் பன்முகத்தன்மையை ஊக்குவிப்பதற்கான நாட்டின் தொடர்ச்சியான முயற்சிகளையும் இது வெளிப்படுத்துகிறது.

 ஏனைய முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுடன் யாழ்ப்பாணமும் இணைக்கப்பட்டிருப்பது, வௌிநாட்டு சுற்றுலாப் பயணிகளை வரவழைக்கும் இலங்கையின் சுற்றுலாத்துறைக்கு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக அமைந்துள்ளது. 1970-இல் நிறுவப்பட்ட லோன்லி பிளானட், உலகின் மிகவும் நம்பகமான பயண ஊடக வர்த்தக நாமங்களில் ஒன்றாகும். 

இது உலகளவில் 150 மில்லியனுக்கும் அதிகமான வழிகாட்டிப் புத்தகங்களை விற்றுள்ளதுடன், விரிவான டிஜிட்டல் அணுகலையும் கொண்டுள்ளது. 

 லோன்லி பிளானட்டின் கூற்றுப்படி, 2026 ஆம் ஆண்டில் பயணிக்க சிறந்த 25 இடங்கள் இவை, பெரு, தென் அமெரிக்கா யாழ்ப்பாணம், இலங்கை மெயின், அமெரிக்கா காடிஸ், ஸ்பெயின் ரீயூனியன், ஆப்பிரிக்கா போட்ஸ்வானா, ஆப்பிரிக்கா கார்டஜீனா, கொலம்பியா பின்லாந்து, ஐரோப்பா டிப்பரரி, அயர்லாந்து மெக்சிகோ நகரம் கெட்சால்டெனாங்கோ, குவாத்தமாலா பிரிட்டிஷ் கொலம்பியா, கனடா சார்டினியா, இத்தாலி லிபர்டேட், சாவ் பாவ்லோ யூட்ரெக்ட், நெதர்லாந்து பார்படாஸ், கரீபியன் ஜெஜு-டோ, தென் கொரியா வடக்குத் தீவு, நியூசிலாந்து தியோடர் ரூஸ்வெல்ட் தேசியப் பூங்கா, வடக்கு டகோட்டா குய் நோன், வியட்நாம் சீம் ரீப், கம்போடியா பூக்கெட், தாய்லாந்து இக்காரா-ஃப்ளிண்டர்ஸ் ரேஞ்சஸ் மற்றும் அவுட்பேக், தென் ஆஸ்திரேலியா துனிசியா, ஆப்பிரிக்கா சாலமன் தீவுகள், ஓசியானியா

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

அனுசரணை

images/content-image/1754511373.jpg


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!