இன்றைய ராசிபலன் (27.10.2025) - 12 ராசிகளுக்கும் உள்ளே பலன்கள் உள்ளன

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
2 hours ago
இன்றைய ராசிபலன் (27.10.2025) - 12 ராசிகளுக்கும் உள்ளே பலன்கள் உள்ளன

மேஷம்:

அசுவினி: யோகமான நாள். நெருக்கடிகள் நீங்கும். பெரியோரின் உதவி கிடைக்கும்.

பரணி: வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும். இழுபறியாக இருந்த வேலைகள் நடந்தேறும்.

கார்த்திகை 1: உங்கள் செல்வாக்கு உயரும். பிறரை அனுசரித்துச் சென்று ஆதாயம் காண்பீர்கள்.

ரிஷபம்:

கார்த்திகை 2, 3, 4: இயந்திர இயக்கத்திலும், வாகனப் பயணத்திலும் எச்சரிக்கை அவசியம்.

ரோகிணி: மனதில் இனம்புரியாத குழப்பமும் பயமும் ஏற்படும். செயல்களில் தடுமாற்றம் ஏற்படும்.

மிருகசீரிடம் 1, 2: தொழிலில் கவனம் தேவைப்படும். உடன் பணிபுரிபவர்களால் சில நெருக்கடி தோன்றும்.

மிதுனம்:

மிருகசீரிடம் 3, 4: நன்மைகள் அதிகரிக்கும் நாள். உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்.

திருவாதிரை: கவனமுடன் செயல்படுவீர். உங்கள் முயற்சிக்கு குடும்பத்தினர் உதவி புரிவர்.

புனர்பூசம் 1, 2, 3: வியாபாரத்தில் கவனத்தை அதிகரிப்பீர். வருமானம் திருப்தி தரும்.

கடகம்:

புனர்பூசம் 4: நினைப்பதை நடத்தி முடிக்கும் நாள். இடம் சம்பந்தப்பட்ட விவகாரத்தில் தீர்வு உண்டாகும்.

பூசம்: உடல்நிலை சீராகும். வியாபாரத்தில் ஆதாயம் அதிகரிக்கும். வழக்கு விவகாரம் சாதகமாகும்.

ஆயில்யம்: தொழில் போட்டியாளர்கள் விலகிச் செல்வர். உங்கள் செல்வாக்கு உயரும்.

சிம்மம்:

மகம்: கவனமாக செயல்பட வேண்டிய நாள். வெளியூர் பயணத்தில் எச்சரிக்கை அவசியம்.

பூரம்: பிறரால் சாதிக்க முடியாத ஒன்றை சாதிப்பீர். பிள்ளைகளால் பெருமை அடைவீர்.

உத்திரம் 1: பெரியோரின் ஆலோசனை நன்மை தரும். தொழிலில் கவனம் தேவைப்படும்.

கன்னி:

உத்திரம் 2, 3, 4: உழைப்பு அதிகரிக்கும். அலைச்சல் ஏற்படும் என்றாலும் முயற்சியில் வெற்றி காண்பீர்.

அஸ்தம்: உடலில் இருந்த சங்கடம் நீங்கும். வெளியூர் பயணம் ஆதாயம் தரும்.

சித்திரை 1, 2: எடுக்கும் முயற்சி இழுபறியாகும் என்றாலும் நினைத்ததை சாதித்து லாபம் காண்பீர்.

துலாம்:

சித்திரை 3, 4: பெரியோர் ஆதரவால் பெருமையடையும் நாள். உங்கள் எண்ணம் இன்று நிறைவேறும்.

சுவாதி: முயற்சியால் முன்னேற்றம் உண்டாகும். பணவரவில் இருந்த தடைகள் விலகும்.

விசாகம் 1, 2, 3: துணிச்சலுடன் செயல்படுவீர். உத்யோகத்தில் இருந்த பிரச்னைகள் முடிவிற்கு வரும்

விருச்சிகம்:

விசாகம் 4: எதிர்பார்த்த பணம் வரும். தெய்வ வழிபாட்டில் பங்கேற்பீர்கள்.

அனுஷம்: வியாபாரத்தில் திட்டமிட்டு செயல்பட்டு வெற்றி காண்பீர். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும்.

கேட்டை: அலுவலக பிரச்னைகள் முடியும். வெளியூர் பயணத்தில் ஆதாயம் உண்டாகும்.

தனுசு:

மூலம்: அமைதி காக்க வேண்டிய நாள். எந்த ஒன்றிலும் ஒரு முடிவிற்கு வர முடியாமல் தடுமாறுவீர்.

பூராடம்: அலட்சிய மனப்பான்மையை கைவிடுங்கள். வியாபாரத்தில் முன்னேற்றம் தோன்றும்.

உத்திராடம் 1: தொழிலில் இன்று ஓரளவு ஆதாயம் காண்பீர். எதிர்பார்ப்பு தள்ளிப்போகும்.

மகரம்:

உத்திராடம் 2, 3, 4: வரவு செலவில் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டிய நாள்.

திருவோணம்: புதிய முதலீடுகளை இன்று தவிர்ப்பதுடன், வியாபாரத்தில் யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம்.

அவிட்டம் 1, 2: திடீர் செலவுகளால் நெருக்கடி ஏற்பட்டாலும் அதற்கேற்ற வருமானம் வரும்.

கும்பம்:

அவிட்டம் 3, 4: திட்டமிட்டிருந்த வேலைகளை நடத்தி முடிப்பீர். வருமானம் அதிகரிக்கும்.

சதயம்: பொன் பொருள் சேர்க்கையில் கவனம் செல்லும். உங்கள் முயற்சி லாபமாகும்.

பூரட்டாதி 1, 2, 3: வியாபார பிரச்னைகளை சரி செய்வீர். தடைபட்ட வேலைகள் நடந்தேறும்.

மீனம்:

பூரட்டாதி 4: வியாபாரத்தில் முன்னேற்றம் காணும் நாள். எதிர்பார்த்த வருவாய் வரும்.

உத்திரட்டாதி: பழைய பிரச்னைகள் முடிவிற்கு வரும். உங்கள் செல்வாக்கு உயரும்.

ரேவதி: தொழிலில் மாற்றம் செய்வது பற்றி யோசிப்பீர். எதிர்பார்த்த தகவல் வரும்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!