155 சதவீதம் வரி விதிப்பதாக சீனாவுக்கு எச்சரிக்கை விடுத்த டிரம்ப்

அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றது முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். டிரம்ப் மேற்கொண்ட பரஸ்பர வரி விதிப்பு நடவடிக்கையால் சர்வதேச அளவில் பொருளாதார தாக்கம் ஏற்பட்டது.
இந்த நிலையில், அமெரிக்க வெள்ளை மாளிகையில் ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பனீஸ் உடன் டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு, டிரம்ப்: “சீனாவுடன் அமெரிக்கா மிகவும் மரியாதையுடன் நடந்து கொண்டுள்ளது. அதேவேளையில், நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளை எனது நிர்வாகம் பொறுத்துக்கொள்ளாது.
சீனா 55 சதவீத வரிகளை செலுத்துகிறது என்பது உங்களுக்கு தெரியும். சீன அதிபர் ஜி ஜின்பிங் அமெரிக்காவுடன் ஒரு நியாயமான வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடாவிட்டால், நவம்பர் 1ம் தேதி முதல் சீனாவுக்கு 155 சதவீதம் வரை வரிகளை எதிர்கொள்ள நேரிடும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
------------------------------------------------------------------------------------
Since taking office as US President, Trump has been taking various aggressive measures. Trump's reciprocal tax measures have had an international economic impact.
In this context, Trump held talks with Australian Prime Minister Anthony Albanese at the US White House.
After these talks, Trump said: "The United States has been dealing with China very respectfully. At the same time, my administration will not tolerate unfair trade practices.
As you know, China pays 55 percent tariffs. If Chinese President Xi Jinping does not sign a fair trade agreement with the US, China will face tariffs of up to 155 percent from November 1."
------------------------------------------------------------------------------------
ඇමරිකානු ජනාධිපති ධුරයට පත්වීමෙන් පසු, ට්රම්ප් විවිධ ආක්රමණශීලී පියවර ගනිමින් සිටී. ට්රම්ප්ගේ අන්යෝන්ය බදු පියවර ජාත්යන්තර ආර්ථික බලපෑමක් ඇති කර තිබේ.
මෙම සන්දර්භය තුළ, ට්රම්ප් එක්සත් ජනපද ධවල මන්දිරයේදී ඕස්ට්රේලියානු අගමැති ඇන්තනි ඇල්බනීස් සමඟ සාකච්ඡා පැවැත්වීය.
මෙම සාකච්ඡාවලින් පසු ට්රම්ප් මෙසේ පැවසීය: "ඇමරිකා එක්සත් ජනපදය චීනය සමඟ ඉතා ගෞරවාන්විතව කටයුතු කර ඇත. ඒ සමඟම, මගේ පරිපාලනය අසාධාරණ වෙළඳ පිළිවෙත් ඉවසන්නේ නැත.
ඔබ දන්නා පරිදි, චීනය සියයට 55 ක තීරු බදු ගෙවයි. චීන ජනාධිපති ෂී ජින්පින් එක්සත් ජනපදය සමඟ සාධාරණ වෙළඳ ගිවිසුමක් අත්සන් නොකළහොත්, නොවැම්බර් 1 වන දින සිට චීනය සියයට 155 දක්වා තීරු බදු වලට මුහුණ දෙනු ඇත."
(வீடியோ இங்கே )



