முஸ்லிம் காங்கிரஸின் சம்மாந்துறை இளைஞர் அமைப்பாளராக அர்ஷத் இஸ்மாயில் நியமனம்.....

#Muslim #ADDA #shelvazug #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
3 hours ago
முஸ்லிம் காங்கிரஸின் சம்மாந்துறை இளைஞர் அமைப்பாளராக அர்ஷத் இஸ்மாயில் நியமனம்.....

சமகால மற்றும் எதிர்கால அரசியல் முன்னெடுப்புக்கள் தொடர்பான விஷேட கலந்துரையாடல் மருதமுனை பிரதேச ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் அமைப்பாளர் சரோ தாஜுதீன் தலைமையில் நேற்று (20) திங்கட்கிழமை மாலை மருதமுனை பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பல பிரதேசங்களுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் இளைஞர் அமைப்பாளர்கள் கட்சியினால் நியமிக்கப்பட்டனர். 

அதன் பிரகாரம் சம்மாந்துறை இளைஞர் அமைப்பாளராக அர்ஷத் இஸ்மாயில் நியமிக்கப்பட்டார்.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தேசியத்தலைவரும் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சட்டமுதுமானி அல்ஹாஜ் ரவூப் ஹக்கீம், ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர், கட்சியின் பிரதித் தேசிய அமைப்பாளரும் 

அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எஸ்.உதுமாலெப்பை, கட்சியின் பொருளாளரும் முன்னாள் கல்முனை மாநகர சபையின் பிரதி மேயருமான ரஹ்மத் மன்சூர், கட்சியின் உதவிச் செயலாளர் மன்சூர் ஏ காதர், கட்சியின் தேசிய இளைஞர் அமைப்பாளரும் பொத்துவில் பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் எஸ்.எம்.எம்.முஷாரப் முதுநபீன், கட்சியின் அம்பாறை மாவட்ட செயற்குழுச்செயலாளரும் முன்னாள் கல்முனை மாநகர சபை உறுப்பினருமான ஏ.சி.சமால்தீன் மற்றும் கட்சி உயர்பீட உறுப்பினர்கள், முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

அனுசரணை

images/content-image/1754511373.jpg






உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!