செவ்வந்தியை மறைத்து வைத்திருந்த சஜித்தின் கிளிநொச்சி - அம்பாள்குளம் செயற்பாட்டாளர் கைது

இலங்கையில் 8 மாதங்களுக்கு முன்னர் நீதிமன்றத்தில் நடந்த கொலை தொடர்பாக இஷாரா செவ்வந்தி என்ற பெண் கடந்த வாரம் நேபாளத்தில் கைது செய்யப்பட்டார்.
பிரபல குற்ற கும்பலை சேர்ந்த கணேமுல்ல சஞ்சீவ கொலையின் பிரதான சந்தேகநபராக இஷாரா செவ்வந்தி அடையாளம் காணப்பட்டார்.
செவ்வந்தி கொலைக்கு பின் இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு படகு மூலம் தப்பி சென்று அங்கு சிறிது காலம் இருந்த பின்னர் நேபாளத்தில் வாழ்ந்து வந்த நிலையில் கைது செய்யப்பட்டார்.
மேலும் இவருடன் சேர்ந்து 6 பேர் கொண்ட குழு நேபாளத்தில் கைது செய்யப்பட்ட இந்த வாரம் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டனர்.
இந்நிலையில், செவ்வந்தியிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில் இலங்கையின் முக்கிய அரசியல்வாதி சஜித் பிரேமதாச அவர்களின் ஐக்கிய மக்கள் சக்தியின் கிளிநொச்சி - அம்பாள்குளம் செயற்பாட்டாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் இலங்கையில் இஷாரா செவ்வந்தியை மறைத்து வைக்க உதவியதற்காக கைது செய்யப்பட்டுள்ளார் என்று தெரியவந்துள்ளது.
------------------------------------------------------------------------------------
A woman named Ishara Chevwanthi was arrested in Nepal last week in connection with a murder that took place in a courtroom 8 months ago in Sri Lanka.
Ishara Chevwanthi was identified as the main suspect in the murder of Ganemulla Sanjeeva, a member of a notorious crime gang.
Chevwanthi fled Sri Lanka to India by boat after the murder and was arrested after staying there for some time before living in Nepal.
A group of 6 people who were arrested in Nepal along with her were brought to Sri Lanka this week.
In this situation, based on the interrogation conducted on Chevwanthi, a Kilinochchi - Ambalkulam activist of prominent Sri Lankan politician Sajith Premadasa's Samagi Jana Bala Shakti has been arrested.
It has been revealed that the person in question has been arrested for helping Ishara Chevwanthi hide in Sri Lanka.
------------------------------------------------------------------------------------
මීට මාස 8 කට පෙර ශ්රී ලංකාවේ අධිකරණ ශාලාවක් තුළ සිදු වූ ඝාතනයක් සම්බන්ධයෙන් ඉෂාරා චෙව්වන්ති නම් කාන්තාවක් පසුගිය සතියේ නේපාලයේදී අත්අඩංගුවට ගන්නා ලදී.
කුප්රකට අපරාධ කල්ලියක සාමාජිකයෙකු වූ ගනේමුල්ල සංජීව ඝාතනයේ ප්රධාන සැකකරු ලෙස ඉෂාරා චෙව්වන්ති හඳුනාගෙන ඇත.
ඝාතනයෙන් පසු චෙව්වන්ති ශ්රී ලංකාවෙන් බෝට්ටුවකින් ඉන්දියාවට පලා ගොස් නේපාලයේ ජීවත් වීමට පෙර එහි ටික කලක් රැඳී සිටීමෙන් පසුව අත්අඩංගුවට ගනු ලැබීය.
ඇය සමඟ නේපාලයේදී අත්අඩංගුවට ගත් 6 දෙනෙකුගෙන් යුත් කණ්ඩායමක් මෙම සතියේ ශ්රී ලංකාවට ගෙන එන ලදී.
මෙම තත්ත්වය තුළ, චෙව්වන්තිගෙන් කරන ලද ප්රශ්න කිරීම් මත පදනම්ව, ප්රමුඛ ශ්රී ලාංකික දේශපාලනඥයෙකු වන සජිත් ප්රේමදාසගේ සමගි ජන බල ශක්ති පක්ෂයේ කිලිනොච්චි - අම්බාල්කුලම් ක්රියාකාරිකයෙකු අත්අඩංගුවට ගෙන ඇත.
ඉෂාරා චෙව්වන්තිට ශ්රී ලංකාවේ සැඟවී සිටීමට උදව් කිරීම සම්බන්ධයෙන් අදාළ පුද්ගලයා අත්අඩංගුවට ගෙන ඇති බව අනාවරණය වී තිබේ.
(வீடியோ இங்கே )



