இஷாராவிற்கு தங்குமிடம் வழங்கிய பெண்ணிற்கு விளக்கமறியல்!
#SriLanka
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
3 hours ago

இஷாரா செவ்வந்திக்கு தங்குமிடம் வழங்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மதுகமவைச் சேர்ந்த பெண்ணை அக்டோபர் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மத்துகமவைச் சேர்ந்த அந்தப் பெண்ணை முதலில் நீதித்துறை மருத்துவ அதிகாரி (ஜே.எம்.ஓ) பரிசோதித்து, பின்னர் கொழும்பு குற்றப்பிரிவு (சி.சி.டி) அதிகாரிகள் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
மத்துகம, வெலிபென்னவில் உள்ள ஒரு வீட்டின் உரிமையாளரான 52 வயது பெண், கைது செய்யப்படுவதைத் தவிர்க்கும் போது இஷாரா செவ்வந்திக்கு தங்குமிடம் வழங்கியதாக பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
(வீடியோ இங்கே )
அனுசரணை



