கனடாவில் தீபாவளி கொண்டாட்ட நிகழ்வில் பங்கேற்ற பிரதமர் மார்க் கார்னி

கனடா பிரதமர் மார்க் கார்னி தீபாவளி பண்டிகை கொண்டாட்ட நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளார்.
கனடாவில் கிரேட்டர் டொராண்டோ பகுதியில் நடைபெற்ற டிரில்லியம் தீபாவளி காலா 2025 நிகழ்வில் கனடா பிரதமர் மார்க் கார்னி கலந்து கொண்டு சிறப்பித்துள்ளார்.
டிரில்லியம் ஹெல்த் பார்ட்னர்ஸ் பவுண்டேஷன் நடத்திய இந்த தீபாவளி பண்டிகையில் கலந்து கொண்டு உரையாற்றிய பிரதமர் மார்க் கார்னி, இது இருளை ஒளி வெல்வது எனவும், நம்பிக்கை புதுப்பித்தல் மற்றும் நற்பண்புகளை அதிகரிக்க செய்தல் ஆகியவை இந்த தீபாவளி பண்டிகையின் மைய மதிப்புகள் என்று விவரித்தார்.
அத்துடன் இந்த ஒளியின் திருநாள் கனடா முழுவதும் பரவி, நம் நாட்டின் பன்முகத்தன்மை மற்றும் ஒற்றுமையை கொண்டாடுவதாகவும் தெரிவித்துள்ளார்.
------------------------------------------------------------------------------------
Canadian Prime Minister Mark Carney attended and graced the Diwali festival celebrations.
Canadian Prime Minister Mark Carney attended and graced the Trillium Diwali Gala 2025 held in the Greater Toronto Area, Canada.
Speaking at the Diwali festival hosted by the Trillium Health Partners Foundation, Prime Minister Mark Carney described it as a celebration of light overcoming darkness, and renewing hope and enhancing virtues as the central values of this Diwali festival.
He also said that this festival of lights will spread across Canada and celebrate the diversity and unity of our country.
------------------------------------------------------------------------------------
කැනඩා අගමැති මාර්ක් කාර්නි දීපවාලි උත්සව සැමරුම් සඳහා සහභාගී වී ආචාර කළේය.
කැනඩා අගමැති මාර්ක් කාර්නි කැනඩාවේ මහා ටොරොන්ටෝ ප්රදේශයේ පැවති 2025 ට්රිලියම් දීපවාලි ගාලා උත්සවයට සහභාගී වී ආචාර කළේය.
ට්රිලියම් සෞඛ්ය හවුල්කරුවන්ගේ පදනම විසින් පවත්වන ලද දීපවාලි උත්සවයේදී කතා කරමින් අගමැති මාර්ක් කාර්නි එය මෙම දීපවාලි උත්සවයේ කේන්ද්රීය වටිනාකම් ලෙස අන්ධකාරය ජය ගනිමින් ආලෝකයේ සැමරුමක් ලෙසත්, බලාපොරොත්තුව අලුත් කර ගුණධර්ම වැඩි දියුණු කරන බවත් විස්තර කළේය.
මෙම ආලෝක උත්සවය කැනඩාව පුරා පැතිරී අපේ රටේ විවිධත්වය හා එකමුතුකම සමරනු ඇතැයි ද ඔහු පැවසීය.
(வீடியோ இங்கே )



