இந்திய பிரதமரை சந்தித்தார் ஹரிணி அமரசூரிய!

#SriLanka #D K Modi #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
2 months ago
இந்திய பிரதமரை சந்தித்தார் ஹரிணி அமரசூரிய!

இந்தியாவிற்கு அதிகாரப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரியவிற்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையே சந்திப்பு நடைபெற்றுள்ளது.

 இலங்கை பிரதமரை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைவதாக இந்திய பிரதமர் தனது ட்விட்டர் கணக்கில் பதிவிட்டுள்ளார். 

 கல்வி, பெண்கள் அதிகாரமளித்தல், புதுமை, மேம்பாட்டு ஒத்துழைப்பு மற்றும் மீனவர் நலன் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் சந்திப்பின் போது விவாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நெருங்கிய அண்டை நாடுகளாக, இரு நாட்டு மக்களின் செழிப்புக்கும், பிராந்தியத்தின் செழிப்புக்கும் நமது ஒத்துழைப்பு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்று இந்திய பிரதமர் தனது ட்வீட்டில் தெரிவித்துள்ளமை குறிப்பித்தக்கது. 

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

அனுசரணை

images/content-image/1754511373.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!