பாகிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதலில் 7 ராணுவ வீரர்கள் மரணம்

பாகிஸ்தான் , ஆப்கானிஸ்தான் இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வருகிறது. ஆப்கானிஸ்தானை ஆட்சி செய்துவரும் தலிபான்கள் இருநாட்டு எல்லையில் கிளை அமைப்பை தொடங்கி பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவதாக பாகிஸ்தான் குற்றஞ்சாட்டி வருகிறது. தெஹ்ரீக் இ தலிபான் என்ற அமைப்பு பாகிஸ்தானில் தாக்குதல் நடத்துவதாக குற்றஞ்சாட்டி வருகிறது.
மேலும், இந்த பயங்கரவாத அமைப்பை அழிப்பதாக கூறி ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் பாகிஸ்தான் விமானப்படை கடந்த சில நாட்களுக்குமுன் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலுக்கு ஆப்கானிஸ்தானை ஆட்சி செய்யும் தலிபான்கள் அரசு கண்டனம் தெரிவித்தது.
இந்நிலையில், பாகிஸ்தானில் இன்று தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அந்நாட்டின் கைபர் பக்துவா மாகாணம் வடக்கு வசிரிஸ்தான் மாவட்டத்தில் ராணுவ தளம் உள்ளது.
இந்த ராணுவ தளத்திற்கு வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட வாகனம் இன்று நுழைந்தது. ராணுவ தளத்தின் வாயிலில் அந்த வாகனத்தை ஓட்டிய நபர் வெடிக்கச்செய்தார்.
இந்த தற்கொலைப்படை தாக்குதலில் 7 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். மேலும், 13 பேர் படுகாயமடைந்தனர். இந்த தற்கொலைப்படை தாக்குதலுக்கு தெஹ்ரீக் இ தலிபான் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
------------------------------------------------------------------------------------
Pakistan and Afghanistan have been at loggerheads for years. Pakistan accuses the Taliban, which rules Afghanistan, of opening a branch on the border and engaging in terrorist activities. It accuses the Tehreek-e-Taliban Pakistan of carrying out attacks in Pakistan.
Moreover, the Pakistani Air Force carried out an attack on the Afghan capital Kabul a few days ago, claiming to destroy this terrorist organization. The Taliban government, which rules Afghanistan, condemned this attack.
In this situation, a suicide attack was carried out in Pakistan today. There is a military base in the North Waziristan district of the Khyber Pakhtunkhwa province of the country.
A vehicle filled with explosives entered this military base today. The person driving the vehicle detonated it at the gate of the military base.
7 soldiers were killed in this suicide attack. 13 others were seriously injured. The Tehreek-e-Taliban Pakistan (TTP) has claimed responsibility for this suicide attack.
------------------------------------------------------------------------------------
පාකිස්තානය සහ ඇෆ්ගනිස්ථානය වසර ගණනාවක් තිස්සේ ගැටුම් පවතී. ඇෆ්ගනිස්ථානය පාලනය කරන තලේබාන් සංවිධානය දේශසීමාවේ ශාඛාවක් විවෘත කර ත්රස්තවාදී ක්රියාකාරකම්වල නිරත වන බවට පකිස්ථානය චෝදනා කරයි. පාකිස්තානයේ ටෙහ්රීක්-ඊ-තලේබාන් සංවිධානය පාකිස්තානයේ ප්රහාර එල්ල කරන බවට එය චෝදනා කරයි.
එපමණක් නොව, පාකිස්තාන ගුවන් හමුදාව දින කිහිපයකට පෙර ඇෆ්ගනිස්ථාන අගනුවර වන කාබුල් වෙත ප්රහාරයක් එල්ල කළ අතර, මෙම ත්රස්තවාදී සංවිධානය විනාශ කරන බව කියා සිටියේය. ඇෆ්ගනිස්ථානය පාලනය කරන තලේබාන් රජය මෙම ප්රහාරය හෙළා දුටුවේය.
මෙම තත්වය තුළ, අද පාකිස්තානයේ මරාගෙන මැරෙන ප්රහාරයක් සිදු කරන ලදී. රටේ කයිබර් පක්තුන්ක්වා පළාතේ උතුරු වසිරිස්තාන් දිස්ත්රික්කයේ හමුදා කඳවුරක් තිබේ.
පුපුරණ ද්රව්ය පිරවූ වාහනයක් අද මෙම හමුදා කඳවුරට ඇතුළු විය. වාහනය පැදවූ පුද්ගලයා හමුදා කඳවුරේ ගේට්ටුවේදී එය පුපුරුවා හැරියේය.
මෙම මරාගෙන මැරෙන ප්රහාරයෙන් සොල්දාදුවන් 7 දෙනෙකු මිය ගියහ. තවත් 13 දෙනෙකු බරපතල තුවාල ලැබූහ. මෙම මරාගෙන මැරෙන ප්රහාරයේ වගකීම පකිස්ථාන තලේබාන් සංවිධානය (TTP) භාරගෙන තිබේ.
(வீடியோ இங்கே )



