சங்குப்பிட்டி சம்பவம்: நகைகளுடன் சிக்கிய குற்றவாளிகள்..!

#SriLanka #Death #Lanka4
Mayoorikka
3 weeks ago
சங்குப்பிட்டி சம்பவம்: நகைகளுடன் சிக்கிய குற்றவாளிகள்..!

பூநகரி, சங்குப்பிட்டி பகுதியில் பெண் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டு  கடலுக்குள் வீசப்பட்ட சம்பவம் தொடர்பில் மருந்தகம் ஒன்றின் உரிமையாளரும் உதவியாளரும் பூநகரி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 யாழ்ப்பாணம் - பூநகரி வீதியில் 18 ஆவது மைல்கல் அருகில் கடந்த 12 ஆம் திகதி பெண் ஒருவரின்  சடலம் மீட்கப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் தங்க நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

 குறித்த பெண் கடந்த 11 ஆம் திகதி வவுனியாவில் உள்ள தனது உறவினர் வீட்டுக்குச் செல்வதாக கூறி வீட்டிலிருந்து வெளியே சென்றதாக அவரது கணவர் பொலிஸாரிடம் கூறியுள்ளார்.

 இது தொடர்பில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளில்,  கொலை சம்பவம் தொடர்பில் மருந்தகம் ஒன்றின் உரிமையாளரும் உதவியாளரும் கடந்த செவ்வாய்க்கிழமை கொள்ளையிட்ட 30 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 கைது செய்யப்பட்டவர்கள் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 51 வயதுடைய மருந்தகம் ஒன்றின் உரிமையாளரும் 32 வயதுடைய அதே மருந்தகத்தின் பெண் உதவியாளரும் ஆவர். இந்த கொலை சம்பவம் தொடர்பில் பூநகரி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

அனுசரணை

images/content-image/1754511373.jpg


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!